அம்மா
எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை,அம்மாக்களைத்தவிர. தனக்கு எத்தனை பிள்ளளைகள் உண்டோ அத்தனை பிள்ளைகள் மீதும் அவர்கொண்ட அன்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவருக்கு மூத்தவன் வேறு இளையவன் வேறு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவ்வாறு பிரித்துப்பார்ப்பதுமில்லை. ஆக யாரை எப்போது எப்படி கவனிக்கிறார் என்பதில்தான் வித்தியாசமிருக்கிறது.
