Sunday, May 13, 2012

அம்மா










எல்லோரும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பதில்லை,அம்மாக்களைத்தவிர. தனக்கு எத்தனை பிள்ளளைகள் உண்டோ அத்தனை பிள்ளைகள் மீதும் அவர்கொண்ட அன்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அவருக்கு மூத்தவன் வேறு இளையவன் வேறு என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவ்வாறு பிரித்துப்பார்ப்பதுமில்லை. ஆக யாரை எப்போது   எப்படி கவனிக்கிறார் என்பதில்தான் வித்தியாசமிருக்கிறது.






வெற்றிபெற்று பரிசில்களோடு வரும் பிள்ளையைவிட தோல்வியோடு வரும் பிள்ளை மீதே தாயின்  முதல்கவனம் இருக்கும். இதை நம்மில் சிலர் புரிந்துகொள்வதில்லை. அதற்காக பரிசுபெற்ற பிள்ளையை கவனிக்காமலில்லை, கொஞ்சம் தாமதித்து அவ்வளவுதான். இதைப்பார்த்து தோல்வியோடு வந்தாலும் அவன்மீதுதனே அம்மா பாசமாக இருக்கிறார் என நாம் நினைப்பது முட்டள்த்தனமானதே. இந்தமாதிரியான சிந்தனையால் பலர் தங்கள் தாய் தந்தையரைப் புரிந்துகொள்ளாது  ஒதுக்கிவைப்பதுமுண்டு.

Add caption

தனது கண்முன்னால் இருக்கும் பிள்ளைகளைவிட எங்கோ ஒரு நாட்டில் இருக்கும்  பிள்ளை மீதே தாயினுடைய முழுக்கவனமும் இருக்கும்.    எவ்வளவுதான் இங்குள்ள பிள்ளைகள் சந்தோசத்தை கொடுத்தாலும் அந்தத்தாயை திருப்திப்படுத்த முடியாது. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் என்று பாரதி பாடியதை நம்தமிழர் எட்டா திக்கு என்று அர்த்தம் கண்டதால் என்னவோ வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் பின்னர் அது இருவராகி மூவராகி இப்படி அத்தனை பிள்ளைகளையும் அனுப்பிவிட்டு இவர்கள் தனிமையில். skype ல கதைக்கலாம் போனில கதைக்கலாம் ஆனால் எல்லையில்லாத தாயன்பை இவை அவர்களிடம் சேர்க்குமா... பேத்தி பேரன் என்று skype ல பாக்கலாம் பாத்தது போதாதுன்ன என்னபண்ணலாம்

No comments:

Post a Comment