Saturday, September 29, 2012


                             சட்ட விரோத சிகரட்கள் கைப்பற்றப்பட்டன.

சட்ட விரோத ஒருதொகை சிகரட்டுகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். இருவேறு இடங்களில் இடம்பெற்ற பொலிசாரின் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவத்தனர்.



மருதானை சங்கராஜ மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய சட்டவிரோத ஒருதொகை சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை புறக்கோட்டை குமார வீதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து 21 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத ஒருதொகை சிகரெட்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

No comments:

Post a Comment